Breaking News
Home / கேரளா / கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஐ.சி.யு.,வில் அனுமதி

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஐ.சி.யு.,வில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன், கேரள மாநில முதல்வராக கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 வரை பதவி வகித்தார். அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

latest tamil news

இந்நிலையில், அச்சுதானந்தனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‛‛முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு இரைப்பை குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளனர்.

 

About Admin

Check Also

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு.

  சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster