கொச்சி: ‘ஒரு பெண்ணின் முந்தைய பாலியல் உறவுகள், ஒழுக்க நடத்தையை காரணம் காட்டி, பலாத்கார வழக்கில் இருந்து ஒருவரை விடுவிக்க முடியாது’ என, மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு தண்டனை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
ஆண் குழந்தை
கேரளாவில் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில், தான் பெற்ற மகளையே தந்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
மகளுக்கு பாதுகாவலராக, ஆதரவாக இருக்க வேண்டிய தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளது கொடூரமானது. இது, பாதுகாவலர்களே பணத்தை கொள்ளையடிப்பதை விட மோசமானது. தான் பலாத்காரம் செய்வதற்கு முன், வேறு சிலருடன் மகள் பாலியல் உறவு கொண்டுள்ளதாக தந்தை கூறியுள்ளார். அதனால், தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

டி.என்.ஏ., எனப்படும் மரபணு பரிசோதனையில், இவர் தான் மகளின் குழந்தைக்கும் தந்தை என்பது உறுதியாகி உள்ளது. ஒரு பெண்ணின் ஒழுக்க நடத்தை, முந்தைய பாலியல் உறவுகள் போன்றவற்றை காரணமாக கூறி, பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து யாரையும் விடுவிக்க முடியாது. பாலியல் பலாத்காரம் நடந்த நேரத்தில், அவரது மகள் சிறுமி தான் என்பது உறுதி செய்யப்படவில்லை.
14 ஆண்டுகள்
அதனால், ‘போக்சோ’ சட்டத்தில் விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த இவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உயர் நீதிமன்றம் கூறிஉள்ளது.
-source dinamalar
Rathiri Rounds Never Stop