
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார், தொடர்ந்து 18 படிக்கும் கீழ் உள்ள ஆலையில் தீ மூட்டப்படும்.
நாளை மறுநாள் கார்த்திகை ஒன்றாம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் சபரிமலையில் புகழ்பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி மகர விளக்கு பூஜை 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெற உள்ளது. கொரோன பரவ காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Rathiri Rounds Never Stop