Breaking News
Home / தமிழகம் / தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் பலி ; ரூ.25 லட்சம் நிவாரணம்

தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் பலி ; ரூ.25 லட்சம் நிவாரணம்

சென்னை: தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கவிதா மீது அங்கிருந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று (நவ.,1) இரவு முதல் கனமழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதி அருகே பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது.

 

தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் போலீஸ் பலி

latest tamil news

அப்போது அதன் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து தலைமை காவலர் கவிதா மீது மரம் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. கனமழை காரணமாக மரம் சாய்ந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

ரூ.25 லட்சம் நிவாரணம்

மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் கவிதாவின் குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster