Breaking News
Home / செய்திகள் / 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு..!

29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 1415 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டி 178 பேருக்கும், திருவள்ளூரில் 81 பேருக்கும், திருவண்ணாமலையில் 31 பேருக்கும், திருநெல்வேலியில் 19 பேருக்கும், விழுப்புரத்தில் 15 பேருக்கும், மதுரையில் 16 பெருக்கும், ராமநாதபுரத்தில் 23 பேருக்கும், சேலத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையில் 14 பேருக்கும், தென்காசியில் 16 பேருக்கும், தேனியில் 8 பேருக்கும், திருச்சி மற்றும் வேலூரில் தலா 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 3 பேருக்கும், தருமபுரி, ஈரோடு, கரூர் , பெரம்பலூரில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 4 பேருக்கும், திருவாரூரில் 8 பேருக்கும், திருப்பூரில் ஒருவருக்கும், விருதுநகரில் 6 பேருக்கும், ராணிப்பேட்டையில் 6 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 7 பேருக்கும், திருப்பத்தூரில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19676 பேர் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 435 பேர் உயிரிழந்துவிட்டனர். 24547 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 14667 பேரும், செங்கல்பட்டில் 1602 பேரும், திருவள்ளூரில் 988 பேரும், காஞ்சிபுரத்தில் 291 பேரும், திருவண்ணாமலையில் 248 பேரும் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மதுரையில் 145 பேரும், தூத்துக்குடியில் 101 பேரும், திருநெல்வேலியில் 89 பேரும் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். கள்ளக்குறிச்சியில் நோய் தொற்றுடன் 97 பேரும், ராணிப்பேட்டையில் 89 பேரும், வேலூரில் 99 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். தமிழகத்தில் 44661 பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 14 ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம். அரியலூர் 392 செங்கல்பட்டு 2882 சென்னை 31896 கோவை 176 கடலூர் 533 தர்மபுரி 27 திண்டுக்கல் 218 ஈரோடு 73 கள்ளக்குறிச்சி 344 காஞ்சிபுரம் 709 கன்னியாகுமரி 122 கரூர் 94 கிருஷ்ணகிரி 39 மதுரை 426 நாகப்பட்டினம் 113 நாமக்கல் 92 நீலகிரி 14 பெரம்பலூர் 146 புதுக்கோட்டை 51 ராமநாதபுரம் 158 ராணிப்பேட்டை 197 சேலம் 229 சிவகங்கை 90 தென்காசி 134 தஞ்சாவூர் 155 தேனி 146 திருப்பத்தூர் 47 திருவள்ளூர் 1865 திருவண்ணாமலை 671 திருவாரூர் 128 தூத்துக்குடி 398 திருநெல்வேலி 464 திருப்பூர் 116 திருச்சி 163 வேலூர் 152 விழுப்புரம் 437 விருதுநகர் 170 விமான நிலைய கண்காணிப்பில்: 200 (வெளிநாடு) விமான நிலைய கண்காணிப்பில் 85 (உள்நாடு) ரயில் நிலைய கண்காணிப்பில்: 309

Thanks: tamil.oneindia

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster