Breaking News
Home / செய்திகள் / வேகமாக உயரும் பெட்ரோல் விலை..!

வேகமாக உயரும் பெட்ரோல் விலை..!

நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 43 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.79.96ஆக விற்கப்படுகிறது.

இதேபோல் டீசல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.69 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் ஒரு மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 9 நாள்களில் மட்டும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் 42 காசுகளும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் 47 காசுகளும் உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Thanks to sathiyam news

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster