
தமிழக அரசு தொழிற்சாலைகளை திறந்தும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலை…
கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. பிறகு படிப்படியாக தளர்த்தி பல்வேறு தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி வழங்கியது.
தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணிக்கு செல்கின்றனர்கள். ஆனால் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி. இல்லையெனில் அனுமதிக்க முடியாது என திருப்பி அனுப்பும் அவநிலை. இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இ பாஸ் கோரி விண்ணப்பித்தால் முதல் கட்டத்திலேயே தள்ளுபடி ஆகின்றது.
ரயில்வே துறையால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் மருத்துவ துறை ஊழியர்கள் அத்தியாவசிய துறை அதிகாரிகள் சென்று வர ஒர்கமேன் ஸபெஷல் என்ற ரயில் இயக்கப்படுகின்றது. அந்த ரயிலிலும் செல்ல முடியாதநிலை காணப்படுகின்றது.
தெிழிற்சாலைகள் தனியார் நிறுவனங்கள் அரசு துறை அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கிய அரசு அதில் பணிப்புரியும் ஊழியர்கள் சென்றுவர மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுப்பது வேடிக்கையாக உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் நிங்கள் பணிப்புரியும் பகுதியிலேயே தங்கிக் கொள்ளூங்கள் என கூறுகின்றனர்கள். இதனால் தனியார் துறை ஊழியர் பணிக்கு செல்லாததால் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மீண்டும் வறுமையில் வாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பல ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் வறுமையை கருத்தில் கொண்டு பணியிழப்பையும் பட்டினியையும் தடுக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்கள்.
Rathiri Rounds Never Stop