Breaking News
Home / 2021 / November (page 6)

Monthly Archives: November 2021

ராமாயண் ரயிலில் காவி சீருடை: எதிர்ப்பால் கைவிட்டது இந்திய ரயில்வே

உஜ்ஜைனி : மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புறப்பட்ட ராமாயண் விரைவு ரயிலில் உள்ள பணியாளர்களுக்கு காவி வண்ணத்தில் சீருடை வழங்கப்பட்டது. அயோத்தி, நாசிக், ராமேஸ்வரம் உட்பட ராமாயணத்துடன் தொடர்புள்ள 15 புனித தலங்களுக்கு செல்லும் இந்த ரயிலில் பணியாளர்கள் காவி சீருடை …

Read More »

தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் இல்லாமல் ஆட்சியும், அரசும் இயங்கிட முடியாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. முதலில் கொரோனா; அதில் முழுமையாக வெளிவரவில்லை …

Read More »

மழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

பெங்களூரு: மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என மோடி உறுதி அளித்ததாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை மீறி பெய்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால், ஏரி, குளம், கட்டை, ஓடைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கனமழை காரணமாக தாழ்வான …

Read More »

5 மாநில தேர்தல்: அதிகாரிகள் ஆலோசனை

புதுடில்லி: உ .பி., உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் குறித்து தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். உ பி., பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு 2022 மார்ச் மாதத்திற்குள் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன. மேலும் இம்மாநில தேர்தல் பணிகள், மின்னணு இயந்திரம், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன …

Read More »

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கோவிட் பாதிப்பு

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் (நவ.,21) கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,488 ஆக குறைந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 7,579 பேர் மட்டுமே நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 543 நாளில் பதிவான மிகக்குறைவான பாதிப்பாகும். இந்தியாவில் நேற்றைய (நவ.,22) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: …

Read More »

மாஜி’ கமிஷனர் கைதுக்கு தடை: விசாரணைக்கு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி : ‘மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உள்நாட்டில் தான் இருக்கிறார்’ என, அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, அவரை கைது செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது. மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் …

Read More »

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 750 ஆக சற்று குறைந்துள்ளது: 843 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 756 -ல் இருந்து 750 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.843 பேர் குணமடைந்து உள்ளனர்.     இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,397 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 750 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் …

Read More »

அனைவருக்கும் வழங்கும் அரசாக இருக்கும்: திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்: திருப்பூரில் நலத்திட்ட பணிகள், உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (நவ.22) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட …

Read More »

தமிழகத்தில் கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பிரச்னையால், ‘ஆன்லைன்’ வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு, கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, உயர் கல்வித்துறை அறிவித்தது. …

Read More »

தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன தெரியும்…

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: எட்டு வழி சாலை திட்டத்துக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அன்னுாரில், 2,500 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என, தி.மு.க., அரசு தெரிவித்துள்ளது. வன பாதுகாப்பு சட்டத்துக்காக நாங்கள் போராடுகிறோம். வேளாண் சட்டத்தை போல இந்த சட்டமும் கொடியது தான். தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன தெரியும்… போராடி போராடியே ஆட்சியையும், தங்கள் கட்சிகளுக்கு ஏராளமான …

Read More »
MyHoster