Breaking News
Home / தமிழகம் / கோவை

கோவை

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம்.10 ஆண்டுகளில் கோவைக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செய்து உள்ளோம். .மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கியது ஆரோக்கியமான செயல்.கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த சாலைகளை திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலில் ஏதாவது ஒரு வழக்குப் போட்டு …

Read More »

அரசியல் பேசாமல் ‘அரசியல்’ பேச வைத்த முதல்வர் ஸ்டாலின்!

கோவை : கோவை வந்திருந்த, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், அரசு விழா என்பதால், அரசியல் பேசாமல், மற்றவர்களை ‘அரசியல்’ பேச வைத்து, சென்னை திரும்பிச் சென்றிருக்கிறார். கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,”கடந்த சட்டசபை தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. இதைப்பற்றி விரிவாக பேசி, அரசியலாக்க தயாராக இல்லை. இது, அரசு விழா,” என, பேச்சைத் …

Read More »

தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் இல்லாமல் ஆட்சியும், அரசும் இயங்கிட முடியாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. முதலில் கொரோனா; அதில் முழுமையாக வெளிவரவில்லை …

Read More »

கோவை அரசு விழாவில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசை; பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு மேடையில் இடம்

கோவை: கோவை மாவட்டத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கோவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க., உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் விழாவை புறக்கணித்த நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மட்டும் விழாவில் பங்கேற்றார். அவரை மேடைக்கு அழைத்து இருக்கை வழங்கினர். கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இது அரசு விழா என்பதால் அரசியல் …

Read More »

கோவையில் சர்வதேச தரத்தில் செம்மொழிப் பூங்கா! கருணாநிதி அறிவிப்பை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்?

கோவை : கோவையில், 12 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. கோவை மத்திய சிறை, நகரின் மையப்பகுதியில், 165.4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இதில் சிறை வளாகம் மட்டும் 72.3 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 92.3 ஏக்கர் பரப்பில் குடியிருப்புகள் உள்ளன. பயன்பாடற்ற பல கட்டடங்களும், காலி இடங்களும் உள்ளன. …

Read More »

புதிய மாநகராட்சிகளில் மட்டுமே வார்டு மறுவரையறை: தாறுமாறான வார்டு பிரிப்பால் ஆளுங்கட்சியினர் அச்சம்

பழைய மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறைக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருப்பதால், அந்த மாநகராட்சிகளில் வெற்றி பெற முடியுமா என்ற அச்சம், ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன், மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி பெருநகரமாக மாற்றப்பட்டு, 155 வார்டுகள், 200 வார்டுகளாக்கப்பட்டன. கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் இருந்த, 72 வார்டுகள், 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டன. அதன்படி, 2011ல் உள்ளாட்சித் தேர்தல் …

Read More »

முதல்வரே, சொன்னீர்களே; செய்யலையே! தூய்மை பணியாளர்கள் ஆதங்கம்

கோவை: ஒப்பந்த முறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக தெரிவித்திருந்த சூழலில், ஒப்பந்த முறையை தொடரவும், தினக்கூலியை, 391 ரூபாயாக குறைத்தும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களை திறக்க, முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தார். தனியார் கல்லுாரியில் அமைத்திருந்த மையத்தை …

Read More »

இலங்கை தாதா அங்கொட லொக்கா கூட்டாளி இருவர் கைது

கோவை: இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் இருவரை, பெங்களூருவில் கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் இருவரையும் பெருந்துறை கிளைச்சிறையில் அடைத்தனர். இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கோவை, சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்தார். திடீர் …

Read More »

போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு; ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவை : ரயில்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்துவது குறித்து, ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.     தொழில் நகரமான கோவைக்கு, பல்வேறு வெளிமாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலத்தவரும் அதிகமாக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு முக்கிய போக்குவரத்தாக ரயில்வே துறை உள்ளது. இதைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தலும் அதிகம் நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், நைஜீரிய வாலிபர் ஒருவர், ரூ.1.25 கோடி போதைப் பொருள் கடத்திய போது …

Read More »
MyHoster