Breaking News
Home / செய்திகள் / சிறப்பாக செயல்படுகிறது தமிழக அரசு முதல்வர் விளக்கம்..

சிறப்பாக செயல்படுகிறது தமிழக அரசு முதல்வர் விளக்கம்..

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ‘பல தலைமுறைகளாக பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றி பெற்றவர்கள் தமிழர்கள். இயற்கைச் சீற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்சிப் பாதையில் தமிழகத்தை அழைத்துச் சென்றோம். 17 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், தூய்மை பணியாளர்கள் என 14 நலவாழ்வு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். ஊரடங்கு காலத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு தடை விதிக்கவில்லை.

விளை பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். தமிழகத்தில் மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதிலிருந்து வீட்டிலேயே இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் கொரோனா பாதிப்புள்ளவர்களில் 86 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரானப் போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமுமில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விலையில்லாமல் அரிசி வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் கொரோனாவைத் தடுக்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

 

Thanks to News 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster