Breaking News
Home / தமிழகம் / அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானங்கள்..!

அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானங்கள்..!

 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களை கடந்து விட்ட நிலையில், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கோமா நிலைக்கு சென்றுவிட்டது.

மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசும் தன் கடமையில் இருந்து தவறிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் தன்னுடைய கஜானாவை நிரப்ப மதுக்கடைகளை திறக்க கொள்கை முடிவெடுத்தது, இதனை எதிர்த்து அரசியல் கட்சிகளும், சமுக ஆர்வலர்களும் நீதிமன்றத்தை நாடினார்கள்.

உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தி்ரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்தது, வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் மதுக்கடைகளை திறந்தன. மதுக்கடைகளை திறந்ததால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்தியவர்களை டாஸ்மாக் எடப்பாடி அரசு காவல்துறையைக் கொண்டு ஒடுக்கியது. மதுக்கடைகள் திறப்பால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது தினக்கூலிகளான ஏழை எளியமக்கள் என்பதை அரசு மனதில் கொள்ளவில்லை.

அதிகளவில் பாதித்த கொரானா தொற்றை காரணம் காட்டி சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் சென்னைவாசிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மதுக்கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மதுக்கடை விற்பனையாளர்கள் ஒரு குவாட்டர் பாட்டில் மீது குறைந்த பட்சம் நூறு ரூபாய்க்கு மேல் அதிக விலை வைத்து விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். என்ற குற்றச்சாட்டினை குடிமகன்களே தெரிவிக்கின்றனர். எந்த வகையான மதுபாட்டில்கள் வாங்கினாலும் ரூபாய் 150, 200, 250, 300, 350. என்கிற அடிப்படையிலே விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாகவும், டோக்கன் 500 முதல் 1000 வரை விற்பனை செய்து அதிலும் பகல் கொள்ளையடிக்கின்றனராம்.

மதுபான கடைகளில் குடிமகன்களிடம் மதுபானங்களை அதிக விலை வைத்து விற்பனை செய்து வருவதைப்பற்றி தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் தெரிந்திருந்தும் கண்டும் காணாமல் இருகின்ற குற்றச்சாட்டு மேலோங்கி இருக்கின்றது. இதனை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்து வருவது புரியாத புதிராகவே உள்ளது. இதனால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது ஏழை எளிய மக்களின் குடும்பங்களே!

Mrp.விலையை விட மதுபாட்டில்கள் அதிகவிலை வைத்து விற்கப்பட்டு வரும் வருவாயை விற்பனையாளர்கள் முதல் டாஸ்மார்க் நிர்வாகம் வரை பங்கு போட்டு கூட்டு கொள்ளை அடிக்கின்றனர். இதில் மதுக்கடைகளுக்கு காவல் காக்கும் காவல்துறைக்கும் கனிசமான கட்டிங் சென்று விடுகின்றதாம். இந்த அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு இல்லை என்பதனை மீண்டும் நிருபித்துள்ளது, திருவள்ளூர் மாவட்டத்தில் mrp விலையைவிட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதால் எதிர்காலத்தில் மதுபிரியர்களின் குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகும் என்ற குற்றச்சாட்டினையடுக்குகிறார் திருவள்ளூர் மாவட்ட சமூக ஆர்வலர் த. கன்னியப்பன்.

 

Thanks to jidthan.page

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster