Breaking News
Home / இந்தியா / ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் தர்ணா: தெலுங்கானாவில் பரபரப்பு

ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் தர்ணா: தெலுங்கானாவில் பரபரப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி நடக்க உள்ள சட்டசபை இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை எனக்கூறி பல கிராமங்களில் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

தெலுங்கானா மாநிலம் ஹூஜாராபாத் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எடலா ராஜேந்தர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியை சேர்ந்த இவர், சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்தார். முதல்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து விலகிய அவர், எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து காலியான அந்த தொகுதிக்கு, நாளை ( அக்.,30) தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்கள் மற்றும் இரண்டு நகராட்சிகளை பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஓட்டுக்கு இன்னும் பணம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தினர். ஓட்டுக்கு பணம் பெறுவது தங்களது உரிமை என்பதால், அதனை வழங்க வேண்டும் எனக்கூறிய அவர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

latest tamil news

அண்டை கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தங்களுக்கு வழங்கவில்லை எனக்கூறி வினவக்கா மண்டலத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் போராட்டம் நடத்திய தகவல் அறிந்ததும் ரங்கப்பூர், கட்ராப்பள்ளி மற்றும் பெடாபப்பியா பள்ளி கிராமங்களில் பணம் விநியோகம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள் போலீசார் படாதபட்டு பட்டனர். ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் போராட்டம் நடத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

ஒரு வீடியாவில், ஓட்டுக்கு பணம் கேட்டு, பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், மற்றொரு வீடியோவில், ஓட்டுக்கு முழுமையான அளவு பணம் கிடைக்கவில்லை. சிறிதளவு தான் கிடைத்துள்ளது. இதனால், நாங்கள் ஓட்டுப்போட மாட்டோம் எனக்கூறியும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster