Breaking News
Home / செய்திகள் / பட்டாசு வெடிக்க போறீகளா : சானிடைசரை தொடாதீங்க !

பட்டாசு வெடிக்க போறீகளா : சானிடைசரை தொடாதீங்க !

சென்னை: பட்டாசு வெடிப்பதற்கு முன் கிருமிநாசினியாக எந்த சானிடைசரையும் தொட வேண்டாம் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வரும், 4ம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

*திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும்.
*குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது.
*பட்டாசு வெடிக்கும்போது காலணி அணிந்திருக்க வேண்டும்
*மின்கம்பங்கள் அருகே வெடிக்கக்கூடாது.
*சானிடைசர் பயன்படுத்திவிட்டு வெடிக்கக்கூடாது.
*முழுமையாக வெடிக்காத பட்டாசுகள் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும்.
*பட்டாசு அருகே சானிடைசர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
*பட்டாசு வெடித்த பின்பு கைகளை கழுவ வேண்டும். இவ்வாறு அந்த வழிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.

latest tamil news

 

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster