Breaking News
Home / இந்தியா / ஆர்.எஸ்.எஸ்., தொண்டரை கொன்றவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும்: மன்மோகன் வைத்யா

ஆர்.எஸ்.எஸ்., தொண்டரை கொன்றவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும்: மன்மோகன் வைத்யா

பாலக்காடு: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஒருவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சஞ்சீத்தின் வீட்டிற்கு நேரில் சென்ற ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் தொண்டரை கொலை செய்தவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி எடுப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பொறுப்பாளர் சஞ்சீத் (27). கடந்த 2 நாட்களுக்கு முன் இவர் தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்மக்கும்பல் இவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து காரில் வந்த நபர்கள் சஞ்சீத்தை சரமாரியாக வெட்டினர். 30க்கும் மேற்பட்ட அரிவாள் வெட்டு மற்றும் கத்திக்குத்து விழுந்தது. இதில் சஞ்சீத் மனைவி கண்முன்னே உயிர் பிரிந்தது. கொலையை கண்டித்து மலப்புல்லாவில் முழு அடைப்பும் நடந்தது.

latest tamil news

இந்த சம்பவம் மூலம் போலீசார் செயல் இழந்து நிற்பதாக மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார். மேலும் இந்த கொலை தொடர்பாக தேசிய புலனாய்வு படையினரின்( என்.ஐ.ஏ.,) விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார். இது தொடர்பாக மாநில கவர்னர் ஆரீப் முகம்மது கானை சந்தித்து குற்றவாளிகள் கண்டுபிடிக்க சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மக்களை திரட்டி வன்முறையை முறியடிப்போம் என்றும் சுரேந்திரன் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து உயிரிழந்த சஞ்சீத்தின் வீட்டிற்கு நேரில் சென்ற ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்.,பொறுப்பாளர் சஞ்சித்தை குறிவைத்து கொன்றுள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசு, இதுபோன்ற கொலைகளை தடுக்க தவறியது மிகவும் பரிதாபத்திற்குரியது.

latest tamil news

ஆர்.எஸ்.எஸ்., காரர்களை குறிவைத்து கொலை செய்வதில் ஆளும் கம்யூ., அரசும் இஸ்லாமிய சக்திகளுக்கும் இடையே ரகசிய புரிதல் உள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த விஷயத்தில் நியாயமான விசாரணையை கோருகிறோம். வன்முறையில் ஈடுபட்டவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும். கேரள அரசு இதற்கு நீதி வழங்காவிட்டால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என கோருகிறோம். அதேபோல், சஞ்சித்தின் கொலையில் பயங்கரவாத தொடர்பு இருப்பதால், என்.ஐ.ஏ விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தொடர்புகள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் குறித்து மேலும் விசாரணை செய்து, சமூகத்தில் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் ஒரே குறிக்கோளுடன் செயல்படும் இந்த பயங்கரவாத அமைப்பை தடை செய்யுமாறு மாநில மற்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு மன்மோகன் வைத்யா கூறினார்.

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster