Breaking News
Home / இந்தியா / ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்

பாலக்காடு : ”ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்,” என மத்திய அமைச்சர் முரளிதரன் வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சில தினங்களுக்கு முன் எலப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பிரமுகர் சஞ்ஜித் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது வீட்டிற்கு, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் முரளிதரன் வந்தார். சஞ்ஜித் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

latest tamil news

இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு மாநில அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். சஞ்ஜித் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையை தொய்வு ஏற்படுத்த சில சக்திகள் மாநில அரசின் பின்னால் செயல்படுகின்றன.

எனவே, இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ., ) விசாரணை நடத்த கேரள அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, முரளிதரன் தெரிவித்தார்.இதன்பின், திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் பிஜுவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் அளித்துள்ளனர்.

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster