திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காந்திநகர், சாஸ்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவர் பழநி சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார் இவருடைய மகள் வித்யா (17) நேற்று காலை செல்போன் வாங்கித் தராததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமி வித்யா தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வந்து பெற்றோர்கள் பார்த்த போது சிறுமி தூக்கிலிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் சிறுமியை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது பரிசோதித்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அறிந்த ஒட்டன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி சிறுமியின் உடல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்தனர்.
Tags #cellphone suicide #Online class #student suicide #ஒட்டன்சத்திரம் #திண்டுக்கல் மாவட்டம்
Check Also
கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி
கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …
Rathiri Rounds Never Stop