தன் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்
இந்தியாவில் நாளுக்கு நால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
பொதுமக்கள் மட்டுமல்லாது மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைத்துறையினர் படப்பிடிப்பின்றி வீட்டிலேயே இருந்தாலும் அவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்தனர். அதேபோல் தமிழில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த சிலநாட்களாகவே தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸூக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டார்.
இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும் தனது வீட்டிலிருப்போருக்கும் பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் பெற்றோர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக சமந்தா, காஜர் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop