இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் பிரகாஷ் ராஜூம் நடிக்கிறார். இன்று முதல் ஷூட்டிங்கில் பங்கேற்றுவருகிறார்.
கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எஃப் திரைப்படம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்தப் படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நான்கு நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னட சினிமாவில் முதல் 100 கோடி வசூல் என்று அசத்தி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.
அந்த படத்தின் இரண்டாவது பாகமான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடித் தீர்த்துவருகின்றனர்.

கே.ஜி.எஃப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான அதிரா பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். அந்த கதபாத்திரத்தின் முதல்லுக்கும் வெளியிடப்பட்டது.
கொரோனா பொதுமுடகத்தில் கே.ஜி.எஃப்பின் சூட்டிங் தடைபட்டிருந்தநிலையில், இன்று முதல் அந்தப் படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளது.
இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜூம் இணைந்துள்ளார். அவர், இன்று சூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop