தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
காணொலி மூலம் நடைபெற உள்ள ஆலோசனையில் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தினமும் சுமார் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்றை குறைக்கும் நோக்கில் ஊரடஙகை மேலும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை தொடர்வதா? அல்லது ரத்து செய்வதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், சென்னை உள்ளி்ட்ட நகரங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு மேலும் தளர்வுகளை அளிப்பது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop