Breaking News
Home / செய்திகள் / முதல்வர் அதிரடி அறிவிப்பு!! தந்தை, மகன் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்!!

முதல்வர் அதிரடி அறிவிப்பு!! தந்தை, மகன் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்!!

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கின் விசாரணை, மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்ஃபோன் கடையை மூடுவது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, அந்த கடையை நடத்திவந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தந்தையும், மகனும் போலீஸ் காவலில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் இன்று (ஜூன் 28) கூறியது

கோவில்பட்டி கிளை சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி மருத்துவமனையில் இறந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்.

கொரோனா நோய்த் தடுப்பு, சிகிச்சை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான ஆலோசனை எதையும் சொல்லவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

இத்தகைய சூழலில், தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

 

thanks To: Samaiyam

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster