“புனித குரானில் சொல்லப்பட்ட நபிகள் நாயகத்தின் போதனைகள்படி நாம் அனைவரும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்காகவும், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காகவும் பாடுபடுவோம்” எனவும் குடியரசுத் தலைவர் கூறி இருக்கிறார். இஸ்லாமியர்கள் மிலாடி நபி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , ‘இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். உலகில் அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் தழைக்கட்டும் …
Read More »முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது, பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. வரவுள்ள பண்டிகை காலத்தையொட்டி, பொருட்களை வாங்க மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், மீண்டும் கொரோனா பரவும் அச்சம் …
Read More »இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் இன்று சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அளிக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. கடந்த 30-ஆம் தேதியுடன் 8-ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், இம்மாதம் 1-ஆம் …
Read More »முதலமைச்சர் பதவியை தூக்கி எறியத் தயார் ; எடப்பாடி பழனிசாமி..
கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், இரண்டு பேரும் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், இருவர் மட்டுமே கட்சி இல்லை என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் வரும் 7-ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். செயற்குழுவில் ஓபிஎஸ்-இபிஎஸ் காரசார விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியான நிலையில், இறுதி முடிவை மூத்த தலைவர்கள் எடுக்கவுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள …
Read More »முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் 176 ஆய்வகங்களில் தினமும் 85,000 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகக் …
Read More »அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை..
கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் முன்னோட்டமாக தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் அமலாக்கப்பட்டதையடுத்து, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் …
Read More »வரதட்சணை கொடுமைக்கு இனி 10 வருஷம் ஜெயில்..!!!
வரதட்சணை கொடுமைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (செப்.16) அறிவித்துள்ளார். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை முதல்வர் சட்டப்பேரவையில் இன்று பட்டியலிட்டு பேசினார். அப்போது பேரவை விதி எண் 110 -ன் கீழ் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: வரதட்சணை கொடுமை தொடர்பான …
Read More »பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் ..
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால் அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தமிழக மாவட்டங்கள் பாதிக்கும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னுரிமை வாய்ந்த துறைகள் எனப்படும் விவசாயம், கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாவட்டங்களுக்கு ரிசர்வ் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கடன் அதிகம் பெறும் மாவட்டங்களுக்கு கடன் அளவைக் …
Read More »கண்தானம் செய்தார் முதல்வர்…
தேசிய கண் தான தினம் நாளை கடைபிடிக்கப்படவுள்ளநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய கண்களைத் தானம் செய்வதாக அறிவித்துள்ளார். தேசிய அளவில் நாளை கண் தான தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதனை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில், http://hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கண்தானம் செய்பவர், தானம் பெறுபவர் என ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் திறந்துவைக்கும் நிகழ்வின்போது, முதல்வர் …
Read More »முதல்வர் மீண்டும் ஆலோசனை!!
தமிழகத்தில் நான்காம்கட்ட பொதுமுடக்க தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிலவரம் குறித்து மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 8) மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் நான்காம்கட்ட பொதுமுடக்க தளர்வுகளை அரசு கடந்த வாரம் (ஆகஸ்ட் 30) அறிவித்தது. இதன்படி மாநிலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவையும் நாளை மறுநாள் …
Read More »
Rathiri Rounds Never Stop