கோவை: தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் இல்லாமல் ஆட்சியும், அரசும் இயங்கிட முடியாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. முதலில் கொரோனா; அதில் முழுமையாக வெளிவரவில்லை …
Read More »தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 750 ஆக சற்று குறைந்துள்ளது: 843 பேர் நலம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 756 -ல் இருந்து 750 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.843 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,397 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 750 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் …
Read More »அனைவருக்கும் வழங்கும் அரசாக இருக்கும்: திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திருப்பூர்: திருப்பூரில் நலத்திட்ட பணிகள், உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (நவ.22) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட …
Read More »தமிழகத்தில் கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம்
சென்னை: தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பிரச்னையால், ‘ஆன்லைன்’ வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு, கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, உயர் கல்வித்துறை அறிவித்தது. …
Read More »தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன தெரியும்…
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: எட்டு வழி சாலை திட்டத்துக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அன்னுாரில், 2,500 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என, தி.மு.க., அரசு தெரிவித்துள்ளது. வன பாதுகாப்பு சட்டத்துக்காக நாங்கள் போராடுகிறோம். வேளாண் சட்டத்தை போல இந்த சட்டமும் கொடியது தான். தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன தெரியும்… போராடி போராடியே ஆட்சியையும், தங்கள் கட்சிகளுக்கு ஏராளமான …
Read More »பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி டிச.,3 வரை தொடர் போராட்டம்: அண்ணாமலை
சென்னை: தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி டிசம்பர் 3ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. மேலும், மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5 ரூபாயும் குறைத்தது. அதே சமயம் …
Read More »நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாவது: அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் …
Read More »கோவை அரசு விழாவில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசை; பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு மேடையில் இடம்
கோவை: கோவை மாவட்டத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கோவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க., உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் விழாவை புறக்கணித்த நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மட்டும் விழாவில் பங்கேற்றார். அவரை மேடைக்கு அழைத்து இருக்கை வழங்கினர். கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இது அரசு விழா என்பதால் அரசியல் …
Read More »தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: ‛‛ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று (நவ.,22) கனமழை பெய்யும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று (நவ.,22ம் தேதி) ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலுார், …
Read More »தகிக்குது தக்காளி – கிலோ ரூ.180; சாம்பார், ரசத்தில் இருந்து தக்காளி ‘எஸ்கேப்’
கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவால், விலை அதிகரித்து கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், ஹோட்டல்கள், வீடுகளில் சாம்பார், ரசம் போன்ற சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து உள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக, காய்கறி வரத்து குறைந்து, 3,000 டன் காய்கறிகள் மட்டுமே …
Read More »
Rathiri Rounds Never Stop