Breaking News
Home / தமிழகம் / ஈரோடு / தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: ‛‛ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று (நவ.,22) கனமழை பெய்யும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

latest tamil news

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று (நவ.,22ம் தேதி) ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

latest tamil news

நாளை 23ம் தேதி: மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

latest tamil news

நவ., 25 மற்றும் 26ம் தேதி: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

 

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

latest tamil news

 

 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:

தென்பரநாடு (திருச்சி), மூக்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) தலா 4 செ.மீ., மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) எடப்பாடி (சேலம்), பந்தலுார் (நீலகிரி), ஆவடி (திருவள்ளூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 3 செ.மீ., எம்.ஆர்.சி.நகர், தரமணி, நுங்கம்பாக்கம் (சென்னை) தலா 2 செ.மீ., பெரம்பூர், பள்ளிக்கரணை,ஏ.சி.எஸ்.கல்லுாரி (சென்னை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), ஏற்காடு (சேலம்) தலா 1 செ.மீ.,

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஏதுமில்லை. இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster