Breaking News
Home / இந்தியா (page 4)

இந்தியா

இந்தியா

ஆர்.எஸ்.எஸ்., தொண்டரை கொன்றவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும்: மன்மோகன் வைத்யா

பாலக்காடு: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஒருவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சஞ்சீத்தின் வீட்டிற்கு நேரில் சென்ற ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் தொண்டரை கொலை செய்தவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி எடுப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பொறுப்பாளர் சஞ்சீத் (27). கடந்த …

Read More »

‘மாஜி’ போலீஸ் கமிஷனர் மனு : நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி,: மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், தன் மீதான கைது நடவடிக்கைகளை கைவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுபான விடுதி உரிமையாளரை மிரட்டி, 9 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக, பரம்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் அவருக்கு எதிராக ஜாமினில் …

Read More »

வாகா எல்லையை திறக்க இந்தியா-பாக்., அனுமதி; பஞ்சாப் முதல்வர் நன்றி

சண்டிகர்: குரு நானக் பிறந்தநாளை முன்னிட்டு வாகா எல்லையை திறக்க இந்தியா-பாக்., அரசுகள் அனுமதியளித்துள்ளன. இதற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் நன்றி தெரிவித்துள்ளார். சீக்கிய மதத் தலைவர் ஸ்ரீ குரு நானக் தேவ்-ன் 552 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் குருநானக் தனது வாழ்நாளின் கடைசி 18 ஆண்டுகளைக் கழித்ததாகக் கூறப்படும் ஸ்ரீ கர்தார்பூர் கோயிலை இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் தரிசிக்க, வாகா …

Read More »

கர்தார்பூர் குருத்வாராவில் பஞ்சாப் அமைச்சரவை குழு வழிபாடு

புதுடில்லி: பாக்.கில் கர்தார்பூரில் குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலத்திற்கு இன்று பஞ்சாப் அமைச்சரவை குழுவினர் வழிபாடு நடத்தினர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாக்.,கில் உள்ள சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் சமாதி அடைந்த குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலம் உள்ளது. இதையும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் இணைக்கும் கர்தார்புர் சாஹிப் பாதையை, பிரதமர் மோடி …

Read More »

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: பெங்களூருவில் ஒருவர் கைது

பெங்களூரு: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை கடந்த 2020ம் ஆண்டு முதல் தேசிய புலனாய்வு முகமை போலீசார் பல்வேறு நகரங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், ரகசிய தகவலின்படி பெங்களூரு சென்ற தேசிய புலனாய்வு முகமை போலீசார், ஜோயிப் மன்னா என்பவரை கைது செய்தனர். இவர் இளைஞர்களை …

Read More »

அகிலேஷ் தன் பெயரையும், கட்சி பெயரையும் மாற்றிக்கொள்ளட்டும்; உ.பி., துணை முதல்வர்

லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்றும், தனது கட்சியின் பெயரை ஜின்னாவாதிக் கட்சி எனவும் மாற்றிக்கொள்ளட்டும் என உத்தர பிரதேசம் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேசவ் பிரசாத் மவுரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியல் செய்வதற்காக சமாஜ்வாதி கட்சி ஜின்னாவைப் பற்றிப் பேசுகிறது. அதனால்தான் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் …

Read More »

கிரிப்டோகரன்சி விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

புதுடில்லி: ” நமது இளைஞர்களை பாதிக்கும் என்பதால், தவறானவர்களின் கைகளுக்கு ‘கிரிப்டோகரன்சி’ செல்வதை தடுப்பதை உறுதி செய்ய அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சிட்னி மாநாட்டில் ‘இந்திய தொழில்நுட்பம்: பரிணாமம் மற்றும் புரட்சி என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நமது இளைஞர்களை பாதிக்கும் என்பதால், தவறானவர்களின் கைகளுக்கு ‘கிரிப்டோகரன்சி’ செல்வதை தடுப்பதை …

Read More »

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.37 ஆனது: 2020 மார்ச்சுக்கு பிறகு குறைவு

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.37 சதவீதமாக குறைந்தது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இதுவே மிகக்குறைவான பதிவு. இந்தியாவில் நேற்றைய (நவ.,17) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இதன் மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.28 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது …

Read More »

வியாழனை விட ஒன்றரை மடங்கு பெரியக் கோள்:இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பெங்களூரு: ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட இயற்பியல் ஆய்வு கூடத்தின் புறக்கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுக் குழு, வியாழனை விட ஒன்றரை மடங்கு பெரிய புறக்கோளை கண்டுபிடித்துள்ளது.     ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு வான் ஆய்வு நிலையத்தில் 1.2 மீட்டர் தொலைநோக்கி உள்ளது. அதனுடன் பாரஸ் (PRL Advanced Radial-velocity Abu-sky Search) ஆப்டிகல் பைபர்- பீட் ஸ்பெக்ட்ரோகிராப் கருவியை இணைத்து இந்த புறக்கோளை கண்டுபிடித்துள்ளனர். TOI 1789b …

Read More »

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஐ.ஜி., தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் ஐ.ஜி., விஜய்குமார் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பொம்பய் மற்றும் கோபால்போரா கிராமங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். புல்வாமா போலீசாரால், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அமீர் பஷீர் மற்றும் முக்தார் பட் ஆகியோரை போலீசார் கைது …

Read More »
MyHoster