Breaking News
Home / இந்தியா / கிரிப்டோகரன்சி விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

கிரிப்டோகரன்சி விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

புதுடில்லி: ” நமது இளைஞர்களை பாதிக்கும் என்பதால், தவறானவர்களின் கைகளுக்கு ‘கிரிப்டோகரன்சி’ செல்வதை தடுப்பதை உறுதி செய்ய அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சிட்னி மாநாட்டில் ‘இந்திய தொழில்நுட்பம்: பரிணாமம் மற்றும் புரட்சி என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நமது இளைஞர்களை பாதிக்கும் என்பதால், தவறானவர்களின் கைகளுக்கு ‘கிரிப்டோகரன்சி’ செல்வதை தடுப்பதை உறுதி செய்ய அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

தொழில்நுட்ப யுகம், நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் மாற்றியுள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றிற்கு புதிய வரையறையை கொடுத்துள்ளது. இறையாண்மை, நிர்வாகம், சட்டம், நெறிமுறைகள், உரிமை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் புதிய கேள்விகளை எழுப்புகிறது. சர்வதேச போட்டி, அதிகாரம் மற்றும் தலைமை ஆகியவற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதேநேரத்தில், சைபர் முதல் விண்வெளி வரை புதிய அச்சுறுத்தல்கள் மற்றும் மோதல் ஆகியவற்றை எதிர்கொள்கிறோம். உலகளாவிய போட்டிக்கு, தொழில்நுட்பம் முக்கிய கருவியாக உள்ளது. எதிர்காலங்களில் சர்வதேச உத்தரவுகளை உருவாக்குகிறது.

latest tamil news

தொழில்நுட்பமும் தகவல்களும் இன்று புதிய ஆயுதமாக மாறியது. வெளிப்படைத்தன்மையே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம். இதனை, சமூக விரேத சக்திகள் தவறாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster