புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.37 சதவீதமாக குறைந்தது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இதுவே மிகக்குறைவான பதிவு.
இந்தியாவில் நேற்றைய (நவ.,17) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

இதன் மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.28 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.37 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (நவம்பர் 18) காலை 8 மணி நிலவரப்படி 114.46 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 73,44,739 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Rathiri Rounds Never Stop