Breaking News
Home / சினிமா / சிம்புவுக்கு திருமணமா?

சிம்புவுக்கு திருமணமா?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிம்பு. 37 வயதாகும் இவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தந்தை டி.ராஜேந்தரும், தாயார் உஷா ராஜேந்தரும் மணப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் சிம்புவின் இளைய சகோதரர் குறளரசனுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிம்புவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக அவ்வபோது செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் சிம்பு லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், கொரோனா பிரச்னைகள் முடிவடைந்த பின்னர் திருமணம் நடைபெற உள்ளதாகவும்  சமீபத்தில் தகவல்கள் பரவின. ஆனால் இதில் உண்மையில்லை என்று டி.ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை” எனத் தெரிவித்துள்ளனர்.

சிம்புவின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், பெண் அமைந்ததும் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக அனைவருக்கும் தாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என தெரிவித்துள்ளனர். எனவே அதுவரை யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சிம்புவின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

thanks  News7

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster