Breaking News
Home / சினிமா / அஜித் எடுத்த அதிரடி முடிவு!

அஜித் எடுத்த அதிரடி முடிவு!

சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை இப்போது தொடங்க வேண்டாம் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு முழுவதுமாக முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகு படத்தின் பணிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்க்கு அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின் பணிகள் தொடங்க இன்னும் சில மாதங்களாகும் என்றும் கூறப்படுகிறது.

வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்பை ரத்து செய்திருந்தது படக்குழு.

Thanks : News 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster