திருவள்ளூர்,
மீன் சந்தைகளில் வியாபரிகள் பார்மலின் ரசாயனம் தடவிய மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் சந்தைகளில் மனிதன் உண்ணக்கூடிய மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஃபார்மலின் போன்ற தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் மனித உடலுக்கு நோய் வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. இத்தகைய மீன்களை உட்கொள்ளும் போது உடலில் ஒவ்வாமை, வாந்தி, தலைவலி மற்றும் கேன்சர் போன்ற நோய் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, மீன் சந்தைகளில் வியாபாரிகள் ஃபார்மலின் தடவிய மீன்களை விற்கக்கூடாது எனவும், இத்தகைய செயல்களில் மீன் விற்பனையாளர்கள் ஈடுபடுவது மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளும் சமயங்களில் கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006-ன்படி, சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும், கடை உரிமையாளர்களின் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அரசு விதிகளின்படி, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Rathiri Rounds Never Stop