Breaking News
Home / உலக செய்திகள் / வாகனத்தை நிறுத்தாமல் சென்ற தொழிலாளியை லத்தியால் தாக்கிய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வாகனத்தை நிறுத்தாமல் சென்ற தொழிலாளியை லத்தியால் தாக்கிய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திசையன்விளை:

திசையன் விளை அருகே உள்ள குருகாபுரத்தை சேர்ந்தவர் கணபதி(வயது 57), கூலித் தொழிலாளி. நேற்று மாலை கணபதி வேலையை முடித்துவிட்டு தனது மருமகன் பாலகிருஷ்ணன் என்பவருடன் மொபட்டில் திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திசையன்விளை தபால் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதனை பார்த்த கணபதி தனது மொபட்டை நிறுத்தாமல் சென்றார். உடனே ஆத்திரம் அடைந்த தலைமை காவலர் வினு தான் வைத்திருந்த லத்தியால் கணபதியை தாக்கியுள்ளார். இதில் கணபதியின் மூக்கில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.

இதையடுத்து அவர் உடனடியாக திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன் எதிரொலியாக அவரை லத்தியால் தாக்கிய தலைமை காவலர் வினு உடனடியாக பாளை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

About Admin

Check Also

பெகாசஸ் ஸ்பைவேர்; இஸ்ரேல் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு

வாஷிங்டன்: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு மென்பொருளை ஐபோன்களில் நிறுவுவதற்கு எதிராக அதனை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster