Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

சென்னை:

கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் விலை வரலாறு காணாத அளவுக்கு பவுன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் கிராம் ரூ.4,214-க்கும், பவுன் ரூ.33,712-க்கும் விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,184-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.33,472-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி இன்று கிராமுக்கு 40 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.49.90-க்கும், ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆகிறது.

About Admin

Check Also

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர்

வீட்டின் முன்பு குவியும் ஆதரவாளர்கள் புதுக்கோட்டை: இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster