சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது,” என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுவது வழக்கம். டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்துதான் இந்த வகை கொசுகள் உற்பத்தியாகிறது. இவை பகலிலேயே கடிக்கும்.
தமிழகம் முழுவதும் 500 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. மேலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதன்பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: டெங்கு பரவலுக்கு அறிகுறி காய்ச்சல், குளிர், தலைவலி, வயிற்றுவலி, மூக்கு ஒழுகுதல் இருக்கும். கொசுக்கள் மூலம் பரவுவதால் கொசுக்களை கட்டுப்படுத்த அனைத்து பகுதியிலும் கொசு மருந்து தெளிக்கப்படும்.
அனைத்து வீடுகளுக்கும் பிளீச்சிங் பவுடர் சுமார் 500 கிராம் வழங்கப்படுகிறது. குப்பை கழிவுகளை அகற்றியதும் அந்த இடங்களில் தெளிக்க வேண்டும். சுகாதாரத்துறையினர், குடிநீர் வழங்கல்துறையுடன் இணைந்து செயல்படவும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் கலக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
குடியிருப்பு நலச்சங்கங்களும் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தவறாமல் மருந்து தெளிக்க வேண்டும். சென்னையில் 200 வார்டுகளுக்கும் டெங்கு கட்டுப்படுத்தும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. டெங்கு மேலும் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Rathiri Rounds Never Stop