கராச்சி: பாகிஸ்தானின் அமெரிக்க தூதராக பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான மசூத்கான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் நியமித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பத்திரிகையில் மேற்கோள் காட்டி கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதாக மத்திய அரசு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறது. இதனை அந்நாடு மறுத்தாலும் செயல்பாடுகள் மாற்ற இருப்பதாக உணர முடியவில்லை. இதன் வெளிப்பாடாக அமெரிக்க தூதராக மசூத்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது செயல்பாடுகள் சமீப காலமாக பயங்கரவாத ஆதரவு தொடர்பாகவே இருந்து வந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபராக இருந்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவே பேசி வந்துள்ளார்.
கடந்த 2015ல் புர்கான்வானி என்பவர் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார். இவரது இறுதிச்சடங்கில் இப்பகுதியை சேர்ந்த திரளானவர்கள் பங்கேற்றனர். இவரது 5 வது நினைவுநாளில் மசூத்கான் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். இதில் ” புர்கான் வாணிக்காக வருந்துகிறோம். அவர் நமது இதயங்களில் வாழ்கிறார். இலட்சியத்திற்காக அவர் தன் உயிரை இழந்தார் ” இவ்வாறு பாராட்டியுள்ளார்.

மேலும் ஹர்கத் அல் முஜாகிதீன் இஸ்லாமிய அமைப்பின் ஒரு கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இந்த அமைப்பின் தலைவர் ரஹ்மான்ஹலில் அல்குவைதா பயங்கரவாத அமைப்புடன் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது போன்ற அவரது பயங்கரவாத ஆதரவு செயல்பாடு கொண்ட ஒருவரை அமெரிக்க தூதராக நியமனம் செய்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
Rathiri Rounds Never Stop