பனாஜி: கோவாவில் வலுவிழந்த காங்., தற்போது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்குப் பின்னர், பா.ஜ., மூத்த உறுப்பினரான பிரமோத் சாவந்த் கோவாவின் 19ஆவது முதல்வராகப் பதவியேற்றார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

கோவாவில் ஆட்சியை கைப்பற்ற தற்போது காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக கோவா பார்வார்ட் கட்சி மஹா., வாடிகோமண்டக் கட்சி ஆகியவற்றோடு காங்கிரஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பா.ஜ.,வின் மத அரசியலை எதிர்க்க மேற்கண்ட கட்சிகள் தற்போது பா.ஜ.,வுக்கு எதிராக கூட்டணியாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் கோவா காங்கிரஸ் 13 எம்.எல்.ஏ.,க்களை எதிர்க்கட்சிகளிடம் இழந்தது.
பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள் கோவா பா.ஜ.,வுக்கு இடம் மாறினார். செலரியோ என்கிற கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ., திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். இந்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடனேயே காங்கிரஸ் கோவாவில் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஆகவே, தற்போது கூட்டணி பலத்தை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Rathiri Rounds Never Stop