Breaking News
Home / செய்திகள் / புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான தீயணைப்பு அலுவலகங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான தீயணைப்பு அலுவலகங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்..!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகியமாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலகங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

மெரினாவில் மீட்புக்கு நீர் ஊர்தி

மேலும், கரோனா பரவல் காரணமாக பொதுமக்களின் வருகைக்கு தடை செய்யப்பட்டிருந்த மெரினா கடற்கரை தற்போதுபொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர பண்டிகைகளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் மக்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதாலும், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் உடனடி மீட்பு நடவடிக்கைக்காக மெரினா மீட்பு பணிகள் நிலையத்தின் பயன்பாட்டுக்கு கொள்முதல் செய்யப்பட உள்ள 2 நீர் ஊர்திகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் இயங்கும் ஊர்திகள் ஆகியவற்றின் செயல்பாட்டை விளக்கும் குறும்படத்தையும் முதல்வர் பழனிசாமி பார்வைஇட்டார்.

ஆதிதிராவிடர் நலத்துறை

சென்னை வேப்பேரி மற்றும் திருவள்ளூர் அயனம்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.2 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள, பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கான 2 விடுதிக் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இந்த கட்டிடங்களில் தலா 13 அறைகள், காப்பாளர் அறை, நவீன குளியலறை, கழிவறை ஆகிய வசதிகள் உள்ளன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி, பா.பெஞ்சமின், நிலோபர் கபீல், வி.எம்.ராஜலட்சுமி, கே.பாண்டியராஜன், தலைமைச் செயலர் கே.சண்முகம், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், ஆதி திராவிடர் நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், டிஜிபி ஜே.கே.திரிபாதி, தீயணைப்புத்துறை இயக்குநர் எம்.எஸ்.ஜாபர் சேட் ஆகியோர் பங்கேற்றனர்.

Thanks to daily hunt

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster