Breaking News
Home / அரசியல் / திமுக பேனரில் அதிமுக கொடி!

திமுக பேனரில் அதிமுக கொடி!

மணப்பாறையில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனரில் அதிமுகவின் கொடி இருந்ததை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதை அடுத்து திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இதற்கு திமுகவின் பல்வேறு தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரைக்காக திருச்சி அடுத்த மணப்பாறையில் கலந்து கொண்டார்.

அவருடன் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டார். அப்போது இருவரையும் வரவேற்று திமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதில் திமுக கொடிக்கு பதிலாக அதிமுக கொடி அச்சிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த இணையவாசிகள் திமுகவை கலாய்த்து வருகின்றனர்.

Thanks to daily hunt

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster