Breaking News
Home / கல்வி / பழைய இரும்பு கடையில் 5000 இலவச பள்ளி பாடப்புத்தகங்கள் விற்பனை.. சிக்கிய அரசு ஊழியர் !

பழைய இரும்பு கடையில் 5000 இலவச பள்ளி பாடப்புத்தகங்கள் விற்பனை.. சிக்கிய அரசு ஊழியர் !

பழைய இரும்பு கடையில் 5000 இலவச பள்ளி பாடப்புத்தகங்கள் விற்பனை.. சிக்கிய அரசு ஊழியர் !

பழைய இரும்புக் கடையில் இலவச பள்ளிப் பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 38ஆவது மாவட்டமாக புதிதாக உருவாக்கப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம். இந்நிலையில் மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடை உள்ளது.

இந்த கடையில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான இலவச பள்ளிப் பாடப் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதனையடுத்து கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தப்போது 2019 – 20ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடப் புத்தகங்கள் பண்டல்களில் அப்படியே இருந்தது தெரியவந்தது.

அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்படி, பழைய இரும்புக் கடையின் உரிமையாளர் பெருமாள் சாமி மற்றும் பணியாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பழைய இரும்புக் கடையில் இலவச பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்றது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டார். அத்துடன் இரும்புக் கடை உரிமையாளர் பெருமாளையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு வழங்காமல் பழைய இரும்பு கடையில் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster