அம்பானிக்கு சொந்தமான செல்போன் டவர்களை அடித்து நொறுக்கிய விவசாயிகள் !
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் பஞ்சாப், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப்பில் அம்மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது அம்பானி, அதானி குழும பொருட்களை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான செல்போன் கோபுரங்களை பஞ்சாப் விவசாயிகள் அடித்து நொறுக்கி வருகின்றனர்.
நேற்று மட்டும் பஞ்சாப்பில் பல்வேறு பகுதிகளில் 176க்கும் மேற்பட்ட ஜியோ செல்போன் டவர்களை அடித்து நொறுக்கினர். அங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் இருந்த ஊழியர்களையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுவரை 1,561 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள் கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rathiri Rounds Never Stop