Breaking News
Home / செய்திகள் / பாலாற்றில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் வழியாக கூவம் ஆற்றில் செல்லும் ஆற்று நீரை மலர் தூவி வரவேற்றனர்..

பாலாற்றில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் வழியாக கூவம் ஆற்றில் செல்லும் ஆற்று நீரை மலர் தூவி வரவேற்றனர்..

திருவள்ளூர் :.

பாலாற்றில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் வழியாக கூவம் ஆற்றில் செல்லும் ஆற்று நீரை பேரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ் மற்றும் தேமுதிக கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மலர் தூவி வரவேற்றனர்……

திருவள்ளூர் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் பாலாற்றில் கூடுதலாக நீர்வரத்து வர பெற்றதை அடுத்து தடுப்பணையில் 300 கன அடியிலிருந்து 600 கன அடி உபரி நீர் உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது இந்த நீரானது இன்று திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தை வந்தடைந்தது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கூவம் ஆற்றில் தண்ணீர் வந்ததால் பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி தலைவர் ஜெயந்தி சுயம் பிரகாஷ் ,தேமுதிக கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் மற்றும் ஊராட்சிமன்ற பிரதிநிதிகள் கிராம பொதுமக்களுடன் மலர் தூவி ஆற்றுநீரை வரவேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஊராட்சி சார்பில் கொண்டாடி மகிழ்ந்தனர்
கூவம் ஆற்றில் 600 கன அடி வீதம் ஆர்ப்பரித்து செல்வதால்
பேரம்பாக்கம் -இரு ளஞ்சேரி தரைப்பாலம் பகுதியில் ஏற்பட்ட திடீர் ஓட்டையால் பொதுமக்கள் யாரும் உபரி நீர் வெளியேறும் தரை பாலத்தை கடக்க வேண்டாம் என்றும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பேரம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மேலும் தரை பாலத்தை யாரும் கடந்து சென்று விடாத அளவிற்கு தடுப்புகளை இருபுறமும் வைத்துள்ளனர்.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster