Breaking News
Home / கொரோனா / புதிதாக 1220 பேருக்கு கொரோனா பாதிப்பு…

புதிதாக 1220 பேருக்கு கொரோனா பாதிப்பு…

CoronaViurs Update | மாநிலம் முழுவதும் ஒரே நாளில் மேலும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,853 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 1220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1302 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,95,240-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து 400-க்கும் குறைவாக பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி, புதிதாக 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் ஒரே நாளில் மேலும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,853 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளையில், 1302 பேர் குணமடைந்தனர். தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தமாக 7,72,995 பேர் குணமடைந்துள்ளனர். 10,392 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster