வேலூர் மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி, 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் முகமது பாஷா, 30. இவர், வேலூர் மக்காவில் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். கடந்த வாரம் முகமது பாஷாவின் மொபைல் போனில் பேசியவர், தான் வருமான வரித்துறை அதிகாரி, நீங்கள் வரி ஏய்ப்பு செய்கிறீர்கள், 1 கோடி ரூபாய் கொடுத்தால், பிரச்னை வராமல் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார். இது குறித்து, வேலூர் வடக்கு போலீசில் முகமது பாஷா புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சத்துவாச்சாரியை சேர்ந்த அவரது உறவினர், தமீம், 50, என்பவர் வருமான வரித்துறை அதிகாரி போல், போனில் பேசியது தெரியவந்தது. போலீசார் தமீமை நேற்று கைது செய்தனர்.
Thanks dinamalar
Rathiri Rounds Never Stop