
சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த சூரரைப் போற்று படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏழை மக்களும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் ஏர் டெக்கான் என்ற விமான சேவையை ஆரம்பித்த கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றைத் தழுவியது தான் சூரரைப் போற்று படம்.
படத்தைப் பார்த்த கோபிநாத், சூரரைப் போற்று… எனது புத்தகத்தின் உண்மையான சாரத்தை சிறப்பாக வசப்படுத்தி, அதிக கற்பனையுடன் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். நிஜமான ரோலர் கோஸ்டர். ஆம், படத்தை நேற்று இரவு பார்த்தேன். பழையை நினைவுகளைக் கொண்டு வந்த பல குடும்பக் காட்சிகளில் அழவும், சிரிக்கவும் முடியவில்லை.
பெரும் முரண்பாடுகளுடன் பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில் முனைவோரின் போராட்டங்கள், இன்னல்களுக்கு எதிரான, நம்பிக்கை மற்றும் வெற்றி ஆகியவை உண்மையாக சினிமாவாக்கப்பட்டுள்ளது.
என் மனைவி பார்கவி ஆக நடித்துள்ள அபர்ணாவின் கதாபாத்திரம் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் அவரது சுய எண்ணம், வலிமை, மென்மை ஆகியவை அச்சமற்ற கிராமப்புறப் பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. அவர்களது சொந்த முயற்சியில் அவர்கள் தொழில் முனைவோராக சமமாக இருக்க முடியும்.
ஒரு தொழில் முனைவோரின் கனவுகளை நனவாக்க, ஒரு புள்ளியில் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் அதை ஒரு சக்தி வாய்ந்தவராக செய்திருக்கிறார் சூர்யா. இருண்ட காலங்களில் சரியான நேரத்திற்கு வந்துள்ள ஒரு மேம்பட்ட கதை.
இயக்குனர் சுதாவுக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட். ஒரு ஆணுக்குரிய கதையாக சூர்யா முன்னெடுத்துச் சென்றாலும் அபர்ணா நடித்துள்ள மனைவி கதாபாத்திரம் மூலம் சமநிலைப்படுத்திவிட்டார். அபர்ணாவும் உத்வேகம் அளிக்கக் கூடிய மனதைத் தூண்டும் விதத்தில் எதிர் சமநிலையைக் கொடுத்திருக்கிறார்.
அவருக்கு சூர்யா அளித்துள்ள பதிலில், “அன்புள்ள கேப்டன், நீங்கள் ரசித்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. உங்களது நம்பிக்கைக்காக, இந்த நாட்டிற்காக நீங்கள் செய்ததற்காக நாங்கள் அளித்துள்ள சிறிய மரியாதை இது. இன்னும் பலர் இதன் மூலம் உத்வேகம் ஆவார்கள் என எதிர்பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“சார், இன்று எனது சிறப்பான நாள். எங்களுக்கு உத்வேகத்தை அளித்ததற்கு நன்றி. பார்கவி மேடம் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு சவாலாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருந்தது. உங்கள் பாராட்டு எனக்கு நிறைய அர்த்ததைக் கொடுக்கிறது, நன்றி,” என கோபிநாத் மனைவி பார்கவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபர்ணா தெரிவித்துள்ளார்.
thanks to dinamalar
Rathiri Rounds Never Stop