Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருவள்ளூர் / வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்…

வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்…

திருவள்ளூர் மாவட்டம்

நேர்காணல் முடிந்தும் இனசுழற்சி முறையில் வழங்க வேண்டிய ஊராட்சி செயலாளர் பணி ஜாதி ரீதியாக மறுக்கப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அம்மன் கோயில் தெரு சூரகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி மகன் சந்திரசேகர் என்பவர் ஊராட்சி செயலாளர் பணி குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது வெள்ளேரித்தாங்கள் ஊராட்சி செயலாளர் வேலைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பணியிட நிரப்புவதற்கான அழைப்பாணையை ஏற்று நேர்காணலில் கலந்து கொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மின்னஞ்சல் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி இன சுழற்சி முறையில் எனக்கு பணி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தனர்.

அதனடிப்படையில் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிலரின் பேச்சைகேட்டு பட்டியலின அருந்ததிய குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு பணி வழங்காமல் அலைகழிப்பதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் என்றும் என்னால் அதிகாரிகளை எதுவும் செய்ய முடியாது என அச்சுறுத்துவதுடன் பலவிதங்களில் வேலை வழங்காமல் பழிவாங்கி வருகிறார் எனவும்

இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு வயிற்று பிழைப்புக்காக கஷ்டப்பட்டு வரும் எனக்கு மாவட்ட ஆட்சியர் கனிவு கொண்டு பணி வழங்கிட கோறியும், ஊராட்சி செயலாளர் பணிக்கு அனைத்து விதங்களிலும் தகுதியுடைய என்னை உதாசீனப்படுத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

About Admin

Check Also

திருத்தணியில் 20 ஆண்டுக்கு பின் தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு

திருத்தணி சட்டசபை தொகுதிக்கு, 20 ஆண்டுகளுக்கு பின், நேற்று, தி.மு.க., வேட்பாளரை அறிவித்துள்ளது..!! திருத்தணி :- தி.மு.க., கூட்டணி சார்பில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster