மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா பரிசோதனை தொற்று ஏற்பட்டவருக்கான 24 மணி நேரமும் இயங்கும் ஆலோசனை மையம் தொடக்க நிகழ்வில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ”மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் . வெளி மாநிலங்கள், மாவட்டங்களி ல் இருந்து இங்கு வந்தவர்களால் தற்போது தொற்று அதிகரித்து உள்ளது” என்று கூறியுள்ளார்

ஒவ்வொரு வார்டுக்கும் கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு தோறும் சென்று காய்ச்சல் கண்டறியும் பணியும் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து வீடு தோறும் காய்ச்சல் கண்டறியப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியான நபர்களுக்கு மன நல ஆலோசனை தொலைபேசி மூலம் வழங்கப்படுகிறது. அதற்கு தான் தற்போது, இந்த ஆலோசனை மையம் தொடங்கப்ப ட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களுக்கு பயம் வரக்கூடாது. தமிழக அரசு அனைத்து விதமான சிகிச்சை உணவு வழங்கப்படுகிற து.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது. உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பல உயிர் காக்கும் மருந்துகள் வந்துள்ளன. மதுரையை பொறுத்த வரை இறப்பு குறைவு தான். சோதனை அதிகமாக இருப்பதால் அதிக எண்ணிக்கை. அனைவரையும் சோதனை பன்ன முடியாது. எதிர்கட்சிகள் திட்டமிட்டு வதந்தியை பரப்புகின்றனர்.
கொரோனா வார்டில் உணவு குறைவாக உள்ளது. சரியாக இல்லை என புகார் எழுந்துள்ளதே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது உண்மையில்லை. நோயாளிகள் திடீர் அதிகரிப்பால் இது போன்ற தாமதம் ஏற்படுகிறது. உண்மையில்லை” என்று பதிலளித்தார்.இறப்பு விகிதம் மறைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக அரசு கரோனா தடுப்பு பணியில் திறம்பட செயல்படுகிறது, இதை சீர்குலைக்கும் வகையில் எதிர் கட்சிகள் செயல்படுகின்றன. இறப்பு விகிதத்தை மறைக்க வில்லை. அவசியமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Thanks To: News 18
Rathiri Rounds Never Stop