Breaking News
Home / செய்திகள் / துணை முதல்வர் வீட்டில் 3 பேருக்கு கொரோனா!!

துணை முதல்வர் வீட்டில் 3 பேருக்கு கொரோனா!!

சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் வீட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி…

சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீடு உள்பட, அப்பகுதியில் உள்ள அமைச்சர்கள் வீடுகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
முதல்வர், துணை முதல்வர் உள்படத் தமிழ்நாடு அமைச்சர்களின் அரசு வீடுகள் சென்னை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சமீப நாட்களாக அதிகளவில் போலீசாருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து, வியாழக்கிழமை அன்று மேலே குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸ் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

‘வாக்கிங்’ போனா ஃபேன்… கொரோனாவவிட கொடுமையா இல்ல இருக்கு இது!!

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரும் கிண்டி ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

புதன் கிழமை நிலவரப்படி கொரோனா தொற்றால் 976 போலீசார் பாதிக்கப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவித்தன. இந்நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

Thanks To : Samayam

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster