கோவை : ரயில்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்துவது குறித்து, ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொழில் நகரமான கோவைக்கு, பல்வேறு வெளிமாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலத்தவரும் அதிகமாக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு முக்கிய போக்குவரத்தாக ரயில்வே துறை உள்ளது. இதைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தலும் அதிகம் நடக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன், நைஜீரிய வாலிபர் ஒருவர், ரூ.1.25 கோடி போதைப் பொருள் கடத்திய போது கைது செய்யப்பட்டார். இதேபோல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, குட்கா, பான்பராக் கடத்துவதும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ரயில்வே போலீசார் போதைப் பொருட்கள் கடத்தல் குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரயில்வே போலீசார் கூறுகையில், ‘இப்போது கஞ்சா கடத்தலும் அதிகரித்துள்ளது. ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் உடமைகள், சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. சந்தேகத்துக்கு இடமான வகையில் வரும் நபர்களிடம், தீவிர சோதனை நடத்தப்படுகிறது’ என்றனர்.
Rathiri Rounds Never Stop