Breaking News
Home / உலக செய்திகள் (page 6)

உலக செய்திகள்

உலக செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு: குறைவாக சாப்பிட அதிபர் உத்தரவு

பியாங் யாங்: ‛‛வடகொரியாவில் கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதால் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும்,” என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு ‛சீல்’ வைத்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் மூடியுள்ளது.

இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,300 ஆகும். வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

latest tamil news

வட கொரியாவின் சினுயிஜு நகரத்தில் வசிப்பவர்கள் கூறியதாவது: 2025 வரை அரசு குறைவாக உணவு உண்ணச் சொல்கிறது. இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் பற்றாக்குறையால் கடுமையாகத் தவிக்கிறோம். எங்களுக்கு உணவு பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை?. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுத் தரப்பில், ‛‛வட கொரியா கொரோனாவைக் கட்டுப்படுத்தவே எல்லைகளை மூடியது. அதன் பலனை வட கொரியா அடைந்துள்ளது. அதேபோல் உணவுப் பஞ்சத்தையும் சமாளித்துக் கடந்து வரும்,” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.,வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும். இந்த ஆண்டு மட்டும் 8,60,000 டன் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது.

 

பாகிஸ்தானில் 4 போலீசார் சுட்டுக்கொலை

கராச்சி: பாகிஸ்தானில் இஸ்லாமிய அமைப்பு நடத்திய பேரணியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 4 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 30 போலீசார் உள்பட 250 பேர் காயமுற்றனர்.

தெக்ரீக்-இ-லெபாய்க் அமைப்பினர் சார்பில், இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடந்தது. பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா மாவட்டம் ஷாடோக் அருகே சென்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 4 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர். பேரணியில் வந்தவர்கள் ஏகே-47 போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர்.

latest tamil news

வன்முறை சம்பவம் நடந்ததை மாநில முதல்வர் உஸ்மான் புஸ்தார், அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். வன்முறை சம்பவம் குறித்து பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறுகையில், ‛‛சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை அரசு அனுமதிக்காது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.

 

மகனுக்கு ‛ஏ.பி.சி.டி.இ….’ என பெயர் வைத்த தந்தை

ஜகர்தா: இந்தோனேசியாவில் ஆங்கில அகர வரிசையான ‛ஏபிசிடிஇ.. ‘ என்னும் எழுத்துகளை தன் மகனுக்கு பெயராக சூட்டியுள்ளார் ஒருவர்.

தற்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான புதுமையான பெயர்களை சூட்டவே விரும்புகின்றனர். இதற்காக பல வலைதளங்களில் தேடி அதில் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஜூஹ்ரோ – ஜூல்பமி தம்பியர் தங்கள் மகனுக்கு வித்தியாசமான பெயரை வைத்துள்ளனர். ஆம், ஆங்கில அகர வரிசை எழுத்துகளான ‛ஏபிசிடிஇஎப் ஜிஎச்ஐஜெகே ஜூஜூ’ (ABCDEF GHIJK Zuzu) என பெயர் சூட்டியுள்ளனர்.

latest tamil news

12 வயதான அச்சிறுவன் பள்ளியில் தன் பெயரை எழுதியபோது ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கேலி செய்துள்ளனர். இது குறித்து தந்தையிடம் முறையிட்ட பின்னரே, அதுதான் உண்மையான பெயர் எனத் தெரியவந்துள்ளது. இதில் ‛ஜூஜூ’ என்பது பெற்றோர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்துகளாகும். மேலும், தங்களுக்கு அடுத்து பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் ‛என்ஓபிக்யூ’ (NOPQ), ‛ஆர்எஸ்டியூவி’ (RSTUV) போன்ற பெயர்களை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் அந்த குறும்புக்கார தந்தை.

latest tamil news

முன்னதாக கடந்த ஆண்டு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது மகனுக்கு X Æ A-12 என பெயர் சூட்டி இருந்தார். கலிபோர்னியாவின் சட்டப்படி பெயரில் எண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், எண் 12ஐ ரோமன் 12 ஆக மாற்றி, XÆ A-XII என மாற்றிப் பதிவு செய்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை அவினாசி சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு கூறியதாவது: அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது. தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். அவர்களுக்கு எந்த அவமரியாதையையும் ஏற்படுத்தவில்லை.

latest tamil news

எதிர்காலங்களில், அனுமதியின்றி சிலைகள் வைப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததுடன், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசு மற்றும் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

கனடா பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண் நியமனம்

டோரண்டோ: கனடாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா பார்லிமென்டிற்கு கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியான லிபரல் கட்சி பெருவாரியான ஓட்டுகள் பெற்று வெற்றிப்பெற்றது. இதனையடுத்து 3வது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த புதிய அமைச்சரவையின் பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 54) நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழகத்தை சேர்ந்தவர், தாயார் பஞ்சாப் மாநிலத்த சேர்ந்தவர்.

latest tamil news

லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட அனிதா ஆனந்த், 14,511 ஓட்டுகள் பெற்று வெற்றி அடைந்திருந்தார். மேலும் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர் கிம் கேம்ப்பெல் என்னும் ஒரே பெண்மணியே கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்கா செல்வதற்கான நெறிமுறைகள் வெளியீடு: வெளிநாட்டு பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

வாஷிங்டன்: கோவிட் பரவல் காலத்தில் போடப்பட்ட பயண கட்டுப்பாடுகளை நீக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்கான சான்றிதழை காட்ட வேண்டும்.

கோவிட் பரவ துவங்கிய நேரத்தில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு விதித்திருந்தது.

கடந்த செப்., 20ம் தேதி முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நவ., முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதன்படி, இந்த பயண கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள பைடன் நிர்வாகம், தடுப்பூசி சார்ந்து வான்வெளி போக்குவரத்து கொள்கையை வகுத்து, பாதுகாப்பான முறையில், அமெரிக்காவுக்கு சர்வதேச விமான போக்குவரத்தை துவக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இதற்காக வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் அதிபர் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும், சில மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெறுபவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 50 நாடுகளில் இருந்து, சுற்றுலா அல்லாத பயணமாக வருபவர்கள், அவர்களின் நாட்டில் தேசிய அளவில் 10 சதவீதம் பேருக்குமட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவர்களுக்கும் தடுப்பூசியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 60 நாட்களுக்கு மேல் அவர்கள் தங்கியிருந்தால், தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்வது கட்டாயம்.

latest tamil news

அமெரிக்கா வரும் விமானங்களில், பயணம் செய்வதற்கு முன்னர் பயணிகள் தடுப்பூசி போட்டிருப்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அமெரிக்காவின் புதிய பயண கொள்கை மற்றும் தடுப்பூசி கொள்கை குறித்து பயணிகள் தெரிந்திருப்பதையும் விமான நிறுவனங்கள் உறுதி செய்வது அவசியம்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள், தடுப்பூசி போட்டிருப்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை காட்ட வேண்டும். பயணம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடைசி டோஸ் போடப்பட்டிருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.

சர்வதேச பயணிகள், கிளம்புவதற்கு 72 மணி நேரங்களுக்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழையும், தடுப்பூசி போட்டு கொள்ளாத அமெரிக்கர்கள் மற்றும் தடுப்பூசியில் இருந்து விலக்கு கேட்கும் வெளிநாட்டு பயணிகள், கிளம்புவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும்.இந்த புதிய நடைமுறைகள் வரும் நவ.,8 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்: சீனா

பெய்ஜிங்: சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சினோபார்ம், சினோவாக் என்னும் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. சீனாவில் இதுவரை 223 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 105 கோடி பேர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

latest tamil news

இந்நிலையில் அடுத்தாண்டு சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் சூழலில் அங்கு மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ளன. இதனால், பல்வேறு இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குழந்தைகளுக்கும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹூபெய், புஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.

 

சூடானில் ராணுவ புரட்சி: வீட்டு சிறையில் பிரதமர்

கெய்ரோ-சூடானில் ராணுவம் திடீர் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிரதமர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் வன்முறை வெடிக்கும் சூழல் உருவாகிஉள்ளது.

latest tamil news

வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த சூடானில் இரு ஆண்டுகளுக்கு முன் சர்வாதிகார ஆட்சி நடத்திய உமர் அல் பஷீர் நீக்கப்பட்டார். இதையடுத்து நாடு மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு திரும்ப, ஜெனரல் அப்துல் படா புர்ஹன் தலைமையில் உயர்மட்ட ஆட்சிக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியது.

சூடான் இடைக்கால பிரதமர் அப்துல்லா ஹம்டோக், தொழில் துறை அமைச்சர் அல் – ஷேக், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஹம்சா பலொல் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் அய்மன் காலித் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.ஆட்சியை பிடித்துள்ள ராணுவம், நாட்டின் பல பகுதிகளில் இணைய சேவையை முடக்கியுள்ளது. அரசு ‘டிவி’யில் தேச பக்தி பாடல்களும், நைல் நதிக் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.

இதற்கிடையே ராணுவத்திற்கு எதிராக தலைநகர் கார்தோம் மற்றும் ஓம்டுர்மன் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைகளை மறித்து, டயர்களை தீயிட்டு எரித்து ராணுவத்தினரை நோக்கி வீசினர். இதையடுத்து ராணுவம், கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தது.

latest tamil news

ராணுவ புரட்சியை உயர்மட்டக் ஆட்சி குழு தலைவர் ஜெனரல் அப்துல் படா புர்ஹன் முன்னின்று நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் அப்துல்லா ஹம்டோக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.சூடான் நிலவரம் குறித்து ஆப்பிரிக்காவிற்கான அமெரிக்க சிறப்பு துாதர் கவலை தெரிவித்துள்ளார். அவர், சூடான் ராணுவத்திடம் பேச்சு நடத்தி வருகிறார்.

 

கொரோனா வைரஸின் மாறுபாடுகள் உருவாகிக் கொண்டே இருக்குமா? சிறப்பு கட்டுரை

கொரோனா வைரஸின் மாறுபாடுகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்குமா என்ற கேள்வி கேட்டால், புதிதாக கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் வரை தொற்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தான். ஆனால் தொடர்ச்சியாக மாறுபாடுகளை உருவாக்கும் அல்லது அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று அர்த்தம் இல்லை.

உலக மக்கள் தொகையில் பாதி பேர் இன்னும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவே தொடர்ந்து புதிதாக மக்களை பாதித்து அவர்களின் உடலில் ஆயிரக்கணகான வைரஸ்களை அடுத்த சில மாதங்கள் அல்லது வருடங்கள் வரை பிரதி எடுக்கும். ஒவ்வொரு முறையும் ஒரு வைரஸ் தன்னை பிரதி எடுக்கும் போது சிறிய அளவில் பிறழ்வுகள் இருக்கத்தான் செய்யும். இந்த சிறிய பிறழ்வுகள் புதிய மாறுபாட்டினை உருவாக்க உதவும். ஆனால் 2019ம் ஆண்டு வைரஸ் வளர்ச்சி அடைந்தது போன்று தற்போது வளர்ச்சி அடையாது.

ஒரு வைரஸ் ஒரு புதிய உயிரினத்தைப் பாதிக்கும்போது, அது புதிய ஹோஸ்ட்டுக்குப் பரந்து விரிந்து பரவ வேண்டும் என்று பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் வைரஸ் நிபுணர் ஆண்ட்ரூ ரீட் கூறுகிறார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகள் படி முந்தைய வைரஸ் மாறுபாட்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு பரவும் தன்மை கொண்டது டெல்டா வைரஸ். இது மேலும் பிறழ்வுகள் அடைந்து அதிக பாதிப்புகளை தரும் வைரஸ் மாறுபாடாக மாற முடியும். ஆனால் மறுபடியும் இரண்டு மடங்கு பரவும் சக்தியை கொண்டிருக்காது என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஆடம் லௌரிங் கூறியுள்ளார்.

வைரஸிற்கான விரைவான பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தை நாங்கள் பார்த்தோம். இது பல்வேறு சேதங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் மேற்கொண்டு தீங்குகளை விளைவுக்கும் பண்புகளை அது கொண்டிருக்கவில்லை என்று ஆடம் கூறியுள்ளார்.

வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உருமாறக் கூடும் ஆனால் அதற்கேற்ற பரிணாம வளர்ச்சி அந்த வைரஸில் இல்லை. அதே போன்று மிகவும் தீவிரமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ள மக்களும் வெளியே சென்று மற்றவர்களுடன் பழகி, வைரஸை பரப்பும் செயல்களை விரும்பவில்லை.

தடுப்பூசிகள் மற்றும் தொற்றுகளின் விளைவாக ஏற்கனவே மக்கள் உருவாக்கியுள்ள எதிர்ப்பு திறனை எதிர்த்து புதிய மாறுபாடுகள் பரவுமா என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நிறைய பேர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ள நிலையில், குறைவான தட்ப்பு திறனை கொண்ட மக்களிடம் மட்டுமே பரவும் வாய்ப்பினையே வைரஸ்கள் கொண்டிருக்கும் என்று டாக்டர் ஜோஷ்வா ஸ்ச்சிஃபெர் கூறியுள்ளார். அவர் ஃப்ரெட் ஹுட்சின்சோன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் வைரஸ் நோயியல் ஆராய்ச்சியாளராக உள்ளார்.

”நோய் எதிர்ப்பு திறனை குறைக்கும் வகையில் வைரஸ்கள் புதிய பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடும். அத்தகைய சூழலில் வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசிகள் மாதிரி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்க ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்வார்கள்” என்றும் அவர் கூறினார்.

-source indianexpress

‘100 கோடி தடுப்பூசி’ இன்று இலக்கை எட்டுகிறது இந்தியா

இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை இன்று கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத் துறை அறிவிப்பின்படி, நேற்று வரை நாடு முழுவதும் 99.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 74 விழுக்காடு மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 31 விழுக்காடு மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ” நாட்டில் தடுப்பூசி 100 கோடியை நெருங்கியுள்ளது. இத்தகைய பொன்னான நிகழ்வில் ஒரு அங்கமாக நீங்கள் மாற, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவின் இந்த வரலாற்று தடுப்பூசி பயணத்திற்கு உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்” என பதிவிட்டிருந்தார்.

-source indianexpress

MyHoster