கராச்சி: பாகிஸ்தானில் இஸ்லாமிய அமைப்பு நடத்திய பேரணியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 4 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 30 போலீசார் உள்பட 250 பேர் காயமுற்றனர்.
தெக்ரீக்-இ-லெபாய்க் அமைப்பினர் சார்பில், இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடந்தது. பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா மாவட்டம் ஷாடோக் அருகே சென்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 4 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர். பேரணியில் வந்தவர்கள் ஏகே-47 போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர்.

வன்முறை சம்பவம் நடந்ததை மாநில முதல்வர் உஸ்மான் புஸ்தார், அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். வன்முறை சம்பவம் குறித்து பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறுகையில், ‛‛சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை அரசு அனுமதிக்காது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.
Rathiri Rounds Never Stop