Breaking News
Home / உலக செய்திகள் / வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு: குறைவாக சாப்பிட அதிபர் உத்தரவு

வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு: குறைவாக சாப்பிட அதிபர் உத்தரவு

பியாங் யாங்: ‛‛வடகொரியாவில் கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதால் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும்,” என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு ‛சீல்’ வைத்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் மூடியுள்ளது.

இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,300 ஆகும். வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

latest tamil news

வட கொரியாவின் சினுயிஜு நகரத்தில் வசிப்பவர்கள் கூறியதாவது: 2025 வரை அரசு குறைவாக உணவு உண்ணச் சொல்கிறது. இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் பற்றாக்குறையால் கடுமையாகத் தவிக்கிறோம். எங்களுக்கு உணவு பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை?. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுத் தரப்பில், ‛‛வட கொரியா கொரோனாவைக் கட்டுப்படுத்தவே எல்லைகளை மூடியது. அதன் பலனை வட கொரியா அடைந்துள்ளது. அதேபோல் உணவுப் பஞ்சத்தையும் சமாளித்துக் கடந்து வரும்,” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.,வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும். இந்த ஆண்டு மட்டும் 8,60,000 டன் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது.

 

About Admin

Check Also

பெகாசஸ் ஸ்பைவேர்; இஸ்ரேல் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு

வாஷிங்டன்: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு மென்பொருளை ஐபோன்களில் நிறுவுவதற்கு எதிராக அதனை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster