Breaking News
Home / Tag Archives: கோவை

Tag Archives: கோவை

8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை !!!

கோவையில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சரவணம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனியல் (வயது 54). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கோவை அத்திப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு மெஸ்சில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் டேனியல் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை …

Read More »

வரதட்சணை கேட்ட மாமியார்; ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் ..

கோவையில் கோடிக்கணக்கில் வரதட்சனை கேட்ட குடும்பத்தினர் குறித்து மணமகள் வீட்டார் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்தியுள்ளனர். கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கல்பனா. இவரது கணவர் ஸ்ரீகாந்த். இவர்கள் காந்திபுரம் 7 வது வீதியில் பஞ்சரத்தினம் ஜெம்ஸ் என்ற பெயரில் ராசிக்கல் ஜோதிட நிலையம் நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் ரித்தீஷ் என்பவருக்கும், சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னப்பூரணிக்கும் கடந்த …

Read More »

70 அடி கிணற்றுக்குள் விழுந்த மான்!!

கோவை பொள்ளாச்சி அருகே 70 அடி கிணற்றுக்குள் விழுந்த மான் மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நாட்டுக்கால்பாளையம் எனும் பகுதி இருக்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 70 அடியில் ஒரு கிணறு இருக்கிறது. இந்நிலையில், அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மான் திடீரென்று கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதைப் பார்த்த மக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் …

Read More »

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு !!

கோவையில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, நேற்று கோவையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது, அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தடபுடலாக வரவேற்ப்பு அளித்தனர். இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை மீறி கூடியதாகக் கூறி, அண்ணாமலை, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் …

Read More »

கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்கள் -12 வயது சிறுவன் தற்கொலை!!

கோவையில் செல்போனில் நீண்ட நேரம் வீடியோ கேம் விளையாடியதை பெற்றோர்கள் கண்டித்தால் 12 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.   கோவை செல்வபுரம் பாரதிநகரைச் சேர்ந்த தம்பதியினர் செல்வகுமார் (37) லட்சுமி (34). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அதில் 12 வயதில் ராதாகிருஷ்ணன் என்ற மகனும், ஆறு வயதில் செல்வி என்ற மகளும் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இராதாகிருஷ்ணன் 7ம் வகுப்பு படித்து வருகிறான். …

Read More »

இந்து முன்னணி அமைப்பினர் இருவர் கைது!!

கோவையில் வெள்ளிக்கொலுசை அடமானம் வாங்க மறுத்த அடமானகடை உரிமையாளரை வெட்டிய இந்து முன்னணி அமைப்பினர் இருவரை இராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். கோவையில் இராமநாதபுரம் பகுதியில் அடகுகடை நடத்தி வருபவர் இராஜமாணிக்கம், இவர் தங்க நகைகளை அடமானமாக வைத்து, பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றார். நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த தீபக்(23), சபரிசன்(33) ஆகிய இருவரும் அடகு கடைக்கு சென்றுள்ளனர். …

Read More »

சுஷாந்த் சிங்காக உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்!!

கோவையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த ராஜஸ்தான் மாநில தொழிலாளி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கணபத்தாஸ். 20 வயதான இவர், கோவை அய்யண்ண கவுடர் வீதியில் வசித்து வந்தார். கணபத் தாஸ் வெரைட்டி ஹால்  பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் கணபத் தாஸ்  அறைக்கு உணவருந்த வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் …

Read More »

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!!

கோவையில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அண்மையில் கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது கடும் நடடிவக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்தது. ஆனால், மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். ஜூன் 20-ம் தேதி முதல் கோவை மாநகராட்சி எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு, அனைவருக்கும் …

Read More »

அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு கொரோனா மாஸ்க் !!

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் முகக் கவசம் அணிவித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன, இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் பெரும்பாலான இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முகக் கவசம் அணிந்து …

Read More »
MyHoster